Tuesday, July 12, 2011

பிரியாணி கஞ்சி, நோன்பு கஞ்சி 3

வெளிநாடுக‌ளில் பேச்சுல‌ர்க‌ள் செய்யும் போது நிறைய‌ பேருக்கு செய்வார்க‌ள். அப்போது குக்க‌ரில் செய்ய‌ முடியாது.

சிறிய பேமிலி என்றால் குக்கரில் செய்யலாம் ஆனால் நிறைய பேருக்கு என்கிற போது கறி கீமாவை தனியாக தாளிக்கனும், அரிசியை தனியாக வேகவிடனும்.இது டபுள் மசாலா கொடுத்து பிரியாணி போல் தாளித்து செய்வது.

தேவையான பொருட்கள்

மட்டன் கீமா = 300 கிராம்
அரிசி நொய் = 3 டம்ளர்
பச்ச பருப்பு = அரை டம்ளர்
வெங்காயம் = நான்கு
தக்காளி = முன்று
பச்ச மிளகாய் = முன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் = முன்று மேசை கரண்டி
கேரட் = இரண்டு
கொத்து மல்லி = அரை கைபிடி
புதினா கால் கைபிடி
தயிர் = இரண்டு மேசை கரண்டி
மிளகாய் தூள் = இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் = அரை தேக்கரண்டி
எண்ணை முன்று மேசை க‌ர‌ண்டி
டால்டா = ஒரு தேக்க‌ர‌ன்டி
ப‌ட்டை = ஒரு அங்குல‌ம் அள‌வு
கிராம்பு = முன்று
ஏல‌ம் = ஒன்று
தேங்காய பால் = அரை மூடி

செய்முறை

1. அரிசி நொய் (நொய் மிக்சியில் பொடிக்க முடியவில்லை என்றால் அரிசியை ஊறவைத்து கையால் பினைந்து உடைத்து விடவும்) மற்றும் பாசி பருப்பு (வருத்தது) அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

2. ஒரு பெரிய வயகன்ற சட்டியில் ஒன்றுக்கு முன்று மடங்கு தண்ணீரை கொதிக்க விட்டு ஊறிய அரிசி மற்றும் பருப்பை சேர்த்து தேவைக்கு உப்பு போட்டு குழைய வேக விடவும்.

3. கீமாவை கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும், வெங்காயம், தக்காளி அரிந்து வைக்கவும். புதினா, கொத்து மல்லியை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வடித்து வைக்கவும்.தேங்காயை பாலெடுத்து வைக்கவும்.

4. இப்போது கீமாவை தனியாக தாளிக்கனும்.சட்டியை காயவைத்து எண்ணை + டால்டாவை ஊற்றி பட்டை, ஏலம், கிராம்பு போட்டு தாளித்து வெங்காயத்தை அரிந்து சேர்த்து வதக்கி, வெங்காயம் மடங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு வாடை போனதும் கொத்து மல்லி புதினா, தக்காளி, பச்ச மிளகாயை போட்டு வதக்கி சிறிது நேரம் தீயை சிம்மில் வைத்து வேகவிடவும்.

5. கேரட்டை பொடியாக அரிந்து சேர்த்து, கீமா, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வேகவிடவும்.பாதி வேகும் போடு தயிரை சேர்க்கவும்.கூட்டு ந‌ல்ல‌ வெந்து கிரிப்பாகி எண்ணை தெளிந்து வ‌ரும் போது இர‌க்கி விட‌வும்.
6. வெந்து கொண்டிருக்கும் அரிசியில் இந்த‌ க‌ல‌வையை சேர்த்து தேங்காய் பாலும் சேர்த்து அடி பிடிக்காம‌ல் ந‌ன்கு கிள‌றி கொதிக்க‌ விட்டு க‌டைசியாக‌ கொத்து ம‌ல்லி புதினா தூவி இர‌க்க‌வும்.

குறிப்பு:

இதே போல் சிக்க‌ன் கீமாவிலும் செய்ய‌லாம் இல்லை சிக்க‌ன் (அ) ம‌ட்ட‌னை பொடியாக‌ அரிந்து போட்டும் செய்ய‌லாம் அரிந்து போட்டு செய்யும் போது 400 கிராம் அள‌வு எடுத்து கொள்ள‌வும். க‌றி அதிக‌மா விரும்பாத‌வ‌ர்க‌ள் இதே அள‌வே போதும்.

பேச்சுல‌ர்க‌ள் பிரியாணி க‌ஞ்சி என்றில்லை சாதா க‌ஞ்சியையும் ம‌சாலா க‌ம்மியாக‌ போட்டு இதே போல் செய்ய‌லாம்.

வெஜிடேரியன்கள்வெஜ் க‌ஞ்சியும் இதே முறையில் க‌றி, சிக்க‌னுக்கு ப‌தில் (முட்டை கோஸ், கேர‌ட், பீன்ஸ், முழுபாசிப‌ருப்பு சிறிது சேர்த்து செய்ய‌லாம்)
ப‌ச்ச‌ ப‌ருப்புக்கு ப‌தில் க‌ட‌லை ப‌ருப்பும் போட‌லாம்.
இதே போல் லைட் ம‌சாலாவில் ப‌ச்ச‌மிளகாய் ம‌ட்டும் சேர்த்து ப‌ள்ளி வாச‌ல் க‌ஞ்சி போல் த‌யாரிக்க‌லாம்.

No comments:

Post a Comment